பொதுவாகவே நமது முன்னோர்கள் சொல்லி வைத்த அனைத்து விடயங்களுக்கும் பின்னால் மிகப்பெரிய அர்த்தம் ஒழிந்திருக்கும் என்பது நிதர்சனம்.

அவர்கள் பின்பற்றிய சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் இன்று அறிவியல் விளக்கத்துடன் அறிவியலாளர்களும் விஞ்ஞானிகளும் கூட ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தர்மம் செய்வதில் இவ்வளவு விடயங்கள் இருக்கா? இப்படி செய்தால் நன்மைகள் மறுக்கப்படும் | The Right Way To Do Charityஅந்தவகையில் முன்னோரும், மகரிஷிகளும் தர்மம் தலைக்காக்கும் என்று சொல்லிவைத்திருப்பதுடன் தர்மம் செய்வதற்கான சரியான முறை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் தற்காலத்தில் பலரும் இந்த முறையை பின்பற்றி தர்மம் செய்வது கிடையாது. உண்மையில் தர்மம் செய்வதற்கான சரியான முறை குறித்து முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தர்மம் செய்வதில் இவ்வளவு விடயங்கள் இருக்கா? இப்படி செய்தால் நன்மைகள் மறுக்கப்படும் | The Right Way To Do Charity

முன்னோர்களின் கருத்துப்படி 'காணாமல், கோணாமல், கண்டு கொடு!' என்பது தான் தர்மம் செய்வதற்கான சரியான முறையாகும்.

இதற்கான விளக்கம் என்னவென்றால், தர்மம் செய்யும் போது, அதை விளம்பரப்படுத்தாமல், யாருக்கும் தெரியாமல் கொடுக்க வேண்டும் என்பதையே காணாமல் என்ற வார்த்தையில் சொல்லி வைத்திருக்கின்றார்கள். 

தர்மம் செய்வதில் இவ்வளவு விடயங்கள் இருக்கா? இப்படி செய்தால் நன்மைகள் மறுக்கப்படும் | The Right Way To Do Charity

மற்றவர்களுக்கு தெரியும் படி தர்மம் செய்வதால் எந்த பயனும் இல்லை இறைவனின் பார்வையில் இது தர்மமாக கருதப்படாது.

கோணாமல் கொடு என்பது என்னவென்றால், தர்மம் செய்யும் போது, மனம் கோணாமல், முழு மனதோடு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தோடு செய்ய வேண்டும் அதுவே தர்மமாக பார்க்கப்படுகின்றது.

தர்மம் செய்வதில் இவ்வளவு விடயங்கள் இருக்கா? இப்படி செய்தால் நன்மைகள் மறுக்கப்படும் | The Right Way To Do Charity

கண்டு கொடு என்பதன் மூலம் எதை சொல்லிவைத்திருக்கின்றார்கள் என்றால், யாருக்கு என்ன தேவை என்று பார்த்து தர்மம் செய்ய வேண்டும் என்பதை தான்.

படிப்பில் ஆர்வமில்லாதவனுக்கு புத்தகமும், கல்யாண ஆசை இல்லாத ஒருவருக்கு பெண்ணும், பசி இல்லாதவர்களுக்கு அறுசுவை உணவும் கொடுப்பது பயனற்றது.

அதனால், யாருக்கு, என்ன தேவை என்பதை அறிந்து தர்மம் செய்ய வேண்டும் என்பதை தான் கண்டு கொடு என்பதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

தர்மம் செய்வதில் இவ்வளவு விடயங்கள் இருக்கா? இப்படி செய்தால் நன்மைகள் மறுக்கப்படும் | The Right Way To Do Charity

இவை அனைத்தையும் முழுமையாக பின்பற்றி செய்யப்படுவதே உண்மையில் தர்மமான கருதப்படும் ஏதோ நானும் தர்மம் செய்து விட்டேன் என்று, பெருமைபட்டுக் கொள்வதில் பிரயோசனமில்லை. அது வெறும் விளம்பரமே தவிர தர்மம் ஆகாது.