பொதுவாக உடல் இயக்கத்திற்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும்.

தண்ணீர் குடிக்கும் பழக்கம் நல்லது தான். ஆனால் அதை எந்த நேரத்தில குடிக்க வேண்டும் என்ற வரையறை உள்ளது.

இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என மருத்துவர்கள் கூறுவார்கள்.

அந்த வகையில் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் அப்படி என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

நன்மைகள்

1. இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் தண்ணீர் குடித்தால், மனநிலை சரிச் செய்யப்பட்ட நிம்மதியான தூக்கம் கிடைக்கலாம்.

2. தூங்கும் முன்னர் தண்ணீர் குடித்து விட்டு தூங்கினால் காலையில் மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும்.

படுக்கைக்கு போவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா? | Drinking Water Before Sleep Is Good Or Bad3. உடற்பயிற்சி செய்தல், வீட்டில் வேலை செய்தல் மற்றும் வெளியிடங்களில் வேலை செய்தல் உள்ளிட்ட காரணங்களால் தசைக்கு அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதால் தசைகளின் அழுத்தம் குறைந்து தளர்வடையும்.

4. இரவு வேளைகளில் மூலிகை டீ அல்லது சூடான தண்ணீர் குடிப்பது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

படுக்கைக்கு போவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா? | Drinking Water Before Sleep Is Good Or Bad5. மன அழுத்தம் அதிகமாக இருக்கும் ஒருவர் இரவு வேளைகளில் தூங்குவது குறைவாக இருக்கும். இப்படியான பிரச்சினைகளில் அவஸ்தைப்படுபவர்கள் இரவு வேளையில் தண்ணீர் குடிப்பது நிம்மதியான தூக்கத்தை பெறுவார்கள். 

தீமைகள்

1. தூங்கும் முன்னர் தண்ணீர் குடித்து விட்டு தூங்கினால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் உங்களின் தூக்கமும் கலைந்து போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

படுக்கைக்கு போவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா? | Drinking Water Before Sleep Is Good Or Bad2. இரவில் சரியான தூக்கம் இல்லாத போது காலையில் எழுந்து வேலைகளை செய்ய முடியாது, உடலில் களைப்பு ஏற்படும், பகலில் தூங்கி வழிதல், கண் எரிச்சல், கவனக்குறைவு, பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

3. தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சினையுள்ளவர்கள் தண்ணீர் குடித்து விட்டு தூங்கினால் சுவாசக் குழாயில் வீக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீங்கள் சுவாசிப்பதில் கடினமாகலாம்.