ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை சில ராசிக்காரர்கள் புதன் பகவானால் யோகத்தை அனுபவிக்கப் போகின்றன.
அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். நவக்கிரகங்களின் இளவரசன் என்றால் அது புதன் பகவான் தான். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
மேஷம்
புதன் உங்களுக்கு நான்காவது வீட்டில் இருக்கிறார். இதனால் நீங்கள் பல்வேறு விதமான நன்மைகளை பெறப்போகின்றீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
புதிய வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வர வாய்ப்புஉள்ளது. இதுவரையில் உடலில் இருந்த ஆராக்கியப்பிரச்சனைகள் தீரும். எந்த சந்தர்பத்திலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மிதுனம்
உங்கள் ராசியில் இரண்டாவது இடத்தில் புதன் பகவான் இருப்பதால் புதிய வாய்ப்புக்களும் அதற்கேற்ற சூழ்நிலைகளும் குவியும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு முடிவடையும்.
நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு பண வரவு அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
துலாம்
உங்களுக்கு பத்தாவது வீட்டில் புதன் கபவான் இருப்பதால் இவரின் முழு ஆதரவும் அதிஷ்டமும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.