தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர்களில் ஒருவர் நடிகை சரத்குமார். ஆரம்பகாலக்கட்டத்தில் நடிகர் சரத்குமார் பல காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதுவும் திருமணமான போதும் கூட நடிகைகளிடன் ரகசிய காதலில் இருந்திருக்கிறார். அப்படி அதிகளவில் சரத்குமாருடன் கிசுகிசுவில் சிக்கியவர் நடிகை நக்மா.

வட இந்தியாவில் இருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி டாப் இடத்தினை பிடித்தார் நடிகை நக்மா. தற்போது சரத் குமார் நடிகை நக்மாவுக்கு காதல் டார்ச்சர் கொடுத்த விஷயம் பற்றி பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பகிர்ந்துள்ளார்.

நடிகை நக்மா தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். நக்மா வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்தது. ராதிகாவின் மூன்றாம் கணவர் சரத்குமார் தான் நக்மாவை டார்ச்சர் செய்தார். ரகசிய போலிஸ் படத்தின் போது அவருடன் பழகி காதலித்தார் சரத் குமார். அப்படி நக்மா நடிக்கும் இடங்களுக்கு சென்று சரத்குமார் டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருக்கிறார். காதல் கோட்டையில் அஜித்து நெருக்கமாக நடிக்கும் போது அவருடன் ஏன் அப்படி நடிக்கிறாய், நடிக்கக்கூடாது என்று நக்மாவை கேட்டிருக்கிறாராம்.

அதேபோல் வேட்டி மடித்துக் கட்டு படத்தில் பாக்யராஜுடன் நெருக்கமான காட்சியில் நடிக்க கூடாது என்று நக்மாவிடம் சண்டை போட்டிருக்கிறார். அதற்கு நடிகை நக்மா, நீ என்ன தாலிக்கட்டிய புருஷன் என்று நினச்சிட்டு இருக்கியா? நீ ஒரு நடிகர், நான் ஒரு நடிகை, ஒரே படத்தில் நடித்தேன், அவ்வளவு தான் நீ அதையெல்லாம் கேட்கக்கூடாது என்று நக்மா கூறியிருக்கிறார்.

வட இந்தியாவில் இருந்து இங்கே வரும் நடிகைகளுக்கு இந்த மாதிரியான டார்ச்சர்கள் வரும், போலிஸ், விஐபி, தாதாவோ டார்ச்சர் கொடுப்பார்கள். அதனால் வட இந்தியாவில் இருந்து வரும் நடிகைகள் பெரிய நடிகரோடு நட்பாக இருப்பார்கள். அப்போது தான் அதிலிருந்து தப்பிக்கலாம். ரோஜாவும், செல்வமணி ஆள் என்று தெரிந்ததும் யாரும் என்னை நெருங்கவில்லை என்று சொல்வார்கள்.

அதேபோல் நடிகை குஷ்பூவும் நடிகர் பிரபுவுடன் நெருக்கமான இருந்தார். அதுபோல் தான் நக்மாவுக்கும், காதலன் சமயத்தில் பிரபுதேவாவுடன் நடித்தார். நக்மாவை பிரபுதேவா காதலித்தார், ஆனால் நக்மா காதலிக்கவில்லை. இப்படி ஒரு டார்ச்சர் வரும் போது இங்கே இருந்து போய்விடலாம் என்று முடிவு செய்து சினிமாவில் இருந்து விலகினார் நக்மா.