’பாரதி கண்ணம்மா சீரியலில்’ நடித்த ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தண்ணீரில் மிதந்தபடி தூங்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாரதி கண்ணம்மா’ என்ற சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்த ஒரு ரோஷினி பிரியன் அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அதன் பிறகு ’கலக்கப்போவது யாரு சாம்பியன்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் சில மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான சூரியின் ‘கருடன்’ திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் அவரது கேரக்டருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினிக்கு சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவர் செய்யும் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஆற்றில் ஜாலியாக குளிக்கும் வீடியோவை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்டுகள் பதிவாகி வருகிறது.

’உயிர் உங்களுடையது தேவி’ ’ஈரமான ரோஜாவே’ ’ஈரமான ரோஷினி’ ’கடல்ல இருக்க வேண்டிய கடல் கன்னி ரிவர்ல இருக்குது சார்’ போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. இந்த பதிவுக்கு ரோஷினி, பாக்யராஜ் நடித்த ’தூறல் நின்னு போச்சு’ படத்தில் இடம்பெற்ற ’தங்க சங்கிலி’ என்ற பாடலை பின்னணியாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.