பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.
அந்த வகையில், சனியின் உத்தரபாத்ரபாத நட்சத்திரத்தில் ராகு நுழையவுள்ளார். இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சாதகமான விடயங்கள் நடக்கவிருக்கின்றது. கடந்த காலங்களில் இழந்த பதவி, கௌரவம் மீண்டும் பெற வாய்ப்பு இருக்கிறது.
வேத ஜோதிடத்தின்படி, ராகு ஒரு நிழல் கிரகமாக பார்க்கப்படுகின்றது. இது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் ராசிகளுக்கு இடம்பெயர்வது வழக்கம்.
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் ராகு சனியின் உத்தரபாத்ரபாத நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் 12 ராசிக்காரர்களுக்கு ஏதாவது தாக்கம் ஏற்படும். குறித்த பெயர்ச்சி ஜூலை 8 ஆம் திகதி அதிகாலை 4:11 மணிக்கு நடவிருக்கின்றது.
அந்த வகையில் உத்தரபாத்ரபாத நட்சத்திரம் நுழைவால் என்னென்ன நடக்கவிருக்கின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. கடகம்
இந்த பெயர்ச்சியால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் தடுமாறும் அத்தணை வேலைகளும் இந்த காலப்பகுதியில் முடிக்கப்படும். வேலையில்லாமல் வேலை தேடுபவர்கள் இந்த காலப்பகுதியில் வேலை தேடலாம்.
2. துலாம்
ராகுவின் இந்த பெயர்ச்சியால் துலா ராசியில் பிறந்தவர்க்கு சாதகமான பலன்கள் தேடி வரும். வருமானங்கள் வருவதற்கு ஆதாரங்கள் இல்லாவிட்டால் இந்த காலப்பகுதியில் முயற்சிக்கலாம். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
3. மகரம்
மகர ராசியினருக்கு ராகு பெயர்ச்சியால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையுடன் கூடிய வெளிநாட்டு பயணங்கள் அடிக்கடி நிகழும். இந்த காலத்தில் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.