வட கொரிய ஆட்சியாளரின் செல்வாக்குமிக்க தங்கையான கிம் யோ ஜாங், நாட்டின் இரண்டாவது அதிகாரம் மிக்க ஆளுமையாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரிய உளவுத்துறையின்படி, வட கொரிய தலைவரின் பணிச்சுமையை குறைப்பதற்காக பொது அரசு விவகாரங்களை மேற்பார்வையிட கிம் ஜாங் உன் தனது சகோதரி கிம் யோ ஜாங்கிற்கு பகுதியளவு அதிகாரம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளுக்கான பொறுப்பில் பங்களித்த, வடகொரிய தலைவரின் தலைமைத் தளபதியாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணியாற்றும் அவரது சகோதரியான கிம் யோ ஜாங், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் உண்மையான இரண்டாவது தளபதியாகிவிட்டார் என்று சியோலின் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு உடன்பிறப்பு சர்வாதிகாரத்தை ஒத்திருக்கத் தொடங்கியுள்ள நிலையில், கிம் யோ ஜாங் தனது சகோதரரின் ஆசீர்வாதத்துடன் ஆட்சியை நடத்த உதவுகிறார் என்று தேசிய சட்டமன்றத்தின் புலனாய்வுக் குழுவில் அமர்ந்திருக்கும் தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹா டே-கியுங் கூறுகிறார்.

வியட்நாமில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் 2019ஆம் ஆண்டு அணுசக்தி உச்சி மாநாட்டிற்கு தனது சகோதரருடன் சென்றதிலிருந்து, ஆளும் கட்சி அணிகளில் தனது தங்கைக்கு கிம் ஜோங் உன் ஒரு அளவிலான அதிகாரத்தை வழங்கியதாக ஹா கூறியுள்ளார்.

கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது அவரது அதிகாரத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறார் என்பதுதான் இதன் முக்கிய அம்சமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்கு தலைமை தாங்கிய வட கொரிய ஆட்சியாளர், பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கை குறித்த சில முடிவெடுக்கும் அதிகாரங்களை மற்ற மூத்த அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளார்.

அண்மையில் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு உட்பட்ட கிம், அவர் மீதான அழுத்தத்தை குறைப்பதற்காகவும், எந்தவொரு தோல்விகளுக்கும் குற்றம் சாட்டுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை நோக்கமாக இருக்கலாம் என்று ஹா ஊகிக்கிறார்.

எவ்வாறாயினும், 32 வயதான கிம் யோ ஜாங், வொஷிங்டன் மற்றும் சியோலை நோக்கிய கொள்கையை இயக்குவதாகத் தோன்றினாலும், அவர் தலைமைத்துவத்தை ஏற்பார் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என கூறப்படுகின்றது.

பொருளாதாரத்தில் ஒரு புதிய ஐந்தாண்டு திட்டத்தை வகுக்கவும், கொள்கை குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் ஜனவரி மாதம், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு அழைப்பு விடுத்ததற்கு பின்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.