பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு நபரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் லக்னம் 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் போது இவருக்கு நாக தோஷம் ஏற்படுகின்றது.

அதுமட்டுமன்றி ஒருவரின் ஜாதகத்தில் குறிப்பிட்ட சில கிரகங்களின் நிலை சரியில்லாத போது அல்லது கர்ம வினைகளின் பயனாகவும் நாக தோஷம் ஏற்படலாம்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்களுக்கு நாக தோஷம் இருக்குதுன்னு அர்த்தம் | How To Overcome Naga Dosham

சாஸ்திரங்களின் அடிப்படையில் நாக தோஷம் ஒருவரின் வாழ்க்கையில் நிதி மற்றும் ஆரோக்கியம் ரீதியாகவும் மன நிலை ரீதியிலும் பல்வேறு பாதக தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.

அந்தவகையில் ஒருவரின் ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்களுக்கு நாக தோஷம் இருக்குதுன்னு அர்த்தம் | How To Overcome Naga Dosham

நாக தோஷம் இருப்பவர்களுக்கு அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுவது போன்ற கனவுகள் தோன்றும்.

இரவில் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது மற்றும் தூக்கத்தின் நடுவில் பயந்து எழுவது போன்றனவும் இந்த தோஷத்தின் அறிகுறிகளாகும்.

அதுமட்டுமன்றி அடிக்கடி கனவில் இறந்தவர்கள் தோன்றி பிரச்சினைகளை ஏற்படுத்தினாலோ அல்லது தூக்கத்தில் யாரோ கழுத்தை நெரிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ, அடிக்கடி பாம்பு கடிப்பது போன்ற கனவு வந்தாலோ உங்களுக்கு நாக தோஷம் இருப்பதாக அர்த்தம். 

பிறப்பு ஜாதகத்திலேயே சிலருக்கு நாக தோஷம் இருக்கும் அப்படியானவர்கள் விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் இந்த தோஷத்தில் இருந்து விடுப்படலாம். 

அல்லது சனிக்கிழமை தினங்களில் ஓடும் தண்ணீரில் நிலக்கரி துண்டுகளையோ, பருப்பு, முழு தேங்காயை மிதக்க வைத்தாலோ தோஷத்தில் இருந்து விடுப்படலாம்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்களுக்கு நாக தோஷம் இருக்குதுன்னு அர்த்தம் | How To Overcome Naga Dosham

சனிக்கிழமை நாட்களில் அரச மரத்தை 7 முறை சுற்றி வந்து வழிபடுவதும் அமாவாசை நாட்களில் வெள்ளி நாகத்தை வழிபட்டு அதனை ஆற்றில் மிதக்க விடுவதும் நாக தோஷத்தில் இருந்து விடுபட துணைப்புரியும்.

அமாவாசை நாட்களில் காகம், நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு  உணவு கொடுப்பதும் தோஷத்தில் இருந்து விடுபட உதவும். மேலும் வீட்டில் மயில் தோகை வைப்பது நாக தோஷத்தால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை குறைக்க கூடியதாக இருக்கும்.