இந்துக்கள் அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய துளசிச்செடியை பணப்புழக்கம் வருவதற்கு வாஸ்துப்படி என்வெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசிச்செடி எப்போதும் சூரியன் உதிக்கும் திசையில் இருக்க வேண்டும். இதன் இலைகளை கிள்ளவோ உதிர்த்தவோ கூடாது.
இந்த செடிக்கு வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பச்சைப் பால் ஊற்றினால் லட்சுமியின் அருள் கிடைத்து வீட்டில் பணம் வருவதற்குரிய வழி அதிகரிக்கும்.
இதனால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள், நிதி பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை செய்வதன் மூலம் வீட்டின் வறுமை நீங்கும். துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லதாகும்.
ஆனால் ஏகாதசி நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது எனவும் சொல்லப்படுகிறது. இந்த விஷயங்களை கவனித்து நடந்தால் வீட்டில் வறுமை என்பது வராமல் இருக்கும். பணப்புழக்கமும் அதிகமாகும்.