வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும்.

சுகபோக வாழ்வு உண்டாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உரிய நாள்தான்.

வெள்ளிக்கிழமை நாளில் இதை மட்டும் பண்ணா வீட்டில் ஐஸ்வர்யம் தேடி வரும் | Astrology Veetil Selvam Peruga Friday Viratham

அப்போது, அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிப்பதும், தீபமேற்றி வழிபடுவதும் மங்காத செல்வத்தைத் தந்தருளும். வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் செய்து இறைவனை வழிபட்டால் நன்மை உண்டாகும்.

வெள்ளிக்கிழமை நாளில் இதை மட்டும் பண்ணா வீட்டில் ஐஸ்வர்யம் தேடி வரும் | Astrology Veetil Selvam Peruga Friday Viratham

வழிபாட்டு முறை

அத்துடன், இந்த நாட்களில் ஆலயங்களிலும் சிறப்பான பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும். 15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும்.

வெள்ளிக்கிழமை நாளில் இதை மட்டும் பண்ணா வீட்டில் ஐஸ்வர்யம் தேடி வரும் | Astrology Veetil Selvam Peruga Friday Viratham

கிடைக்கும் பயன் 

இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை உண்டாகும். வெள்ளி கிழமைகளில் மகா லட்சுமி மற்றும் மாரியம்மன் முதலான அம்மனைத் தரிசனம் செய்து வேண்டினால் நன்மை உண்டாகும்.

வெள்ளிக்கிழமை நாளில் இதை மட்டும் பண்ணா வீட்டில் ஐஸ்வர்யம் தேடி வரும் | Astrology Veetil Selvam Peruga Friday Viratham

மங்காத செல்வங்கள் தந்து காத்தருள்வாள் தேவி என்பது ஐதீகம். செவ்வாயும், வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அற்புதமான நாட்கள். செவ்வாய்க்கிழமையில், ராகுகால வேளையான மாலை 3 முதல் 4.30 மணிக்குள், துர்க்கைக்கு தீபமேற்றி வழிபடலாம்.

வெள்ளிக்கிழமை ராகுகால வேளையான காலை 10.30 முதல் 12 மணிக்குள், துர்க்கையை வணங்கி எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவதும் நவகிரக சன்னிதிக்கு சென்று, ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும்.

வெள்ளிக்கிழமை நாளில் இதை மட்டும் பண்ணா வீட்டில் ஐஸ்வர்யம் தேடி வரும் | Astrology Veetil Selvam Peruga Friday Viratham