தமிழ் திரை உலகின் முன்னணி நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா ’அந்த’ மாதிரி படங்களில் நடிக்க மிகவும் ஆசை என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

நடிகை ஆண்ட்ரியா, சரத்குமார் நடித்த ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார் என்பதும் அதன் பிறகு ’ஆயிரத்தில் ஒருவன்’ ’மங்காத்தா’ ’சகுனி’ ’விஸ்வரூபம்’ ’அரண்மனை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. தற்போது அவர் ஐந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்த ’கா’ என்ற திரைப்படம்  நாளை ரிலீசாக உள்ளது. நடிகையாக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் பாடகி ஆகவும் தமிழ் திரையுலகில் ஆண்ட்ரியா பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு ஹாரர் மற்றும் திகில் படம் என்றால் பார்க்க பிடிக்காது என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்த மாதிரி படங்களில் நடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்தார். 

’அரண்மனை’ படத்தில் நடித்த போது மிகவும் ஆர்வத்துடன் நடித்ததாகவும் ’பிசாசு 2’ படம் கூட தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக ஹாரர் படங்களில் நடிக்க ஆசை என்று கூறிய ஆண்ட்ரியா தான் நடித்த படங்கள் தன்னுடைய இயக்குனர்கள் மற்றும் தனது பாடல் பாடும் அனுபவங்கள் ஆகியவற்றையும் அந்த பேட்டியில் பகிர்ந்து உள்ளார். 

 

ஹாரர் மட்டம் திகில் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை என்று ஆண்ட்ரியா கூறியதை அடுத்து இயக்குனர்கள் அதுபோன்ற கதையுடன் அவரை அணுகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.