ஜோதிடத்தின் படி விரல்களின் நீளத்திற்கு பல அர்த்தங்கள் உள்ள நிலையில், கால் பெருவிரலை விட இரண்டாவது விரல் பெரிதாக இருந்தால் என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஒருவரது கை மற்றும் கால் விரல்களைக் கொண்டு அவர்களின் சுபாவத்தை எளிதில் கணித்துவிட முடியும்.
கைவிரல், கால்விரல்களை கொண்டும் உங்களுடைய சுபாவத்தை எளிதாக கணிக்க முடியும். சமுத்திரவியலில் உள்ளங்கை, பாதங்கள் மற்றும் விரல்களின் வடிவம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
கால் மற்றும் கை விரல்களின் வடிவம், நீளம் மற்றும் அகலம் அனைத்தும் பலவிதமான இரகசியத்தை வெளிப்படுத்துகின்றன. சிலருக்குப் பெருவிரலை விட பக்கவிரல் நீளமாக இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். அதன் பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது.
ஜோதிட ரீதியில் கால் விரல்கள் குட்டையாகவும், மிகப்பெரியதாகவும் இருக்கக்கூடாது. விரல் நேராக இருக்க வேண்டும். பெருவிரலுக்கு அடுத்துள்ள விரல் அதன் நீளத்தில் குறைவாக இருக்க வேண்டும்.
பெருவிரலுக்கு அருகே இருக்கும் விரல் நீளமாக இருந்தால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பணச் சிக்கல்களும் ஏற்படும்.
சமுத்திரிக்கவியல் படி, பெருவிரலை விட 2வது விரல் நீளமாக வைத்திருப்பவர்கள் மிகவும் பிடிவாதமாக இருப்பதுடன், ஒரு முடிவு எடுத்துவிட்டால் மீண்டும் மனம் மாற மாட்டார்கள்... எதிலும் சமரசம் செய்து கொள்ளவும் மாட்டார்கள்.
சுயமரியாதைக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் இவர்கள் யாரிடமும் பணிந்து போக மாட்டார்கள். இந்த இயல்பான குணத்தினால் பிரச்சினைகளையும் சந்திக்கும் இவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை ஒருபோதும் கைவிடாமல், சிரமங்கள் வந்தாலும் கைவிடவும் மாட்டார்கள்.
எந்த சூழலையும் நன்றாக கையாளும் ஆற்றல் கொண்ட இவர்கள் வேலை எதையும் பாதியில் நிறுத்திவிட்டு செல்ல மாட்டார்கள், அவசப்பட்டு தவறும் செய்ய மாட்டார்கள்.
ஒரு பெண்ணின் விரல்கள் இப்படி இருந்தால், அவளது கணவன் மிகவும் கட்டுப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இவர்களுக்கு கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றல் அதிகம் என்றும் பல நன்மைகளை பெறவும், நல்ல மக்களின் பழக்க வழக்கங்களும் இவர்களுக்கு கிடைக்கும்.