பொதுவாகவே காதல் என்ற வார்தையிலேயே ஏதோ ஒரு வசீகரம் இருக்கின்றது. அதனால் தான் அனைவரும் காதலிப்பதை விரும்புகின்றார்கள்.

தன்னை விட இன்னொரு உயிரை மேலானது என நினைக்கும் ஒரு உன்னதமான உணர்வே காதல். இந்த வகையில் காதலர் தினத்தைக் கொண்டாடுவது உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் மகிழ்சி தரும் விடயமாக காணப்படுகின்றது.

காதலர் தினத்தில் அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள்... உங்க ராசிக்கு என்ன நிறம்னு பாருங்க | Which Colour Is Best On Valentine S Dayபிப்ரவரி மாதத்தை அன்பின் மாதமாக கருதினாலும் காதலர் தினம் என்பது பிப்ரவரி 14 அன்று தான் கொண்டாடப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்த தினத்தில் காதலர்கள் மற்றும் திருமணமான தம்பதிகள் தங்களின் ராசியின் பிரகாரம் எந்த நிறத்தில் ஆடை அணிவது அந்த நாளை இன்னும் அழகாக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

காதலர் தினத்தில் அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள்... உங்க ராசிக்கு என்ன நிறம்னு பாருங்க | Which Colour Is Best On Valentine S Day

மேஷம்

மேஷ ராசியினர் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். செவ்வாயின்  நிறம் சிவப்பு. எனவே, இந்த ராசியினர் சிவப்பு நிற ஆடைகளை அணிந்தால், இயல்பானவே சாதக பலன்கள் கிடைக்கும். எனவே, காதலர் தினத்தில்  சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் உறவில்  மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசியினர்  காதலர் தினத்தில் பச்சை நிற ஆடைகளை அணிந்தால் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.  காதலர் தினத்தில் பச்சை நிறத்தில் ஆடை  அணிந்தால் உங்கள் துணையை இயல்பாகவே வசீகரிப்பீர்கள். இருவருக்கும் இடையில் பாசம் அதிகரிக்கும். 

மிதுனம்

இந்த ராசியினர் புதன் கிரகத்தில் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். எனவே, அவர்களுக்கு சாதக பலன்களை கொடுக்ககூடிய  நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் ஆகும். இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் துணையின் அப்பால் ஈர்க்கப்படுவீர்கள்.

கடகம்

இந்த ராசியினர்  சிவப்பு நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், சிவப்பு நிற ஆடைகள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையிலான உறவை மேப்படுத்த உதவும்.

காதலர் தினத்தில் அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள்... உங்க ராசிக்கு என்ன நிறம்னு பாருங்க | Which Colour Is Best On Valentine S Day

சிம்மம்

சிம்ம ராசியினர் சூரியனால் ஆளப்படுபவர்கள். எனவே, உறவுகளில் இனிமையை ஏற்படுத்த காதலர் தினத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது சாதக பலன்களை கொடுக்கும்.

கன்னி

 

கன்னி ராசியினர்  காதலர் தினத்தில் பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் ஆடை அணிவது உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக அமையும்.

துலாம்

இந்த ராசியினர் சுக்கிரனால் ஆளப்படுபவர்கள். எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் வெள்ளை, நீலம் மற்றும் ஆரஞ்சு இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் துணையின் அன்பு அதிகரிக்கும். 

விருச்சிகம்

இந்த ராசியினருக்கு ஆரஞ்சு பழுப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் மங்களகரமானதாக இருக்கும்.காதவர் தினத்தில் இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

 

காதலர் தினத்தில் அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்கள்... உங்க ராசிக்கு என்ன நிறம்னு பாருங்க | Which Colour Is Best On Valentine S Day

தனுசு

தனுசு ராசியினர் காதலர் தினத்தில் சிவப்பு நிற ஆடையை அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும். இதன் மூலம் தங்கள் துணையை ஈர்க்க முடியும். 

மகரம்

மகர ராசியினர் காதலர் தினத்தன்று க்ரீம் நிற ஆடைகளை அணிந்தால், அது அவர்களுக்கு மிகவும் சுபமாக அமையும்.

கும்பம்

குமடப ராசியினர் காதலர் தினத்தில் உங்கள் துணையை கவர பச்சை நிற ஆடைகளை அணியுங்கள். இந்த நிற ஆடைகள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர துணைப்புரியும்.

மீனம்

 மீன ராசியினர் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தால், அது அவர்களுக்கு நல்லதாகவே கருதப்படும். இது அவர்களுக்கு அன்பையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.