பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளை போன்று பிறந்த திகதியும் ஒருவரின் தோற்றத்திலும் எதிர்காலத்திலும் தாக்கம் செலுத்தக்கூடியது.

அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சில திகதிகளில் பிறந்தால் துர்திஷ்டம் எனவும் இதனால் வாழ்வில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த திகதிகளில் பிறந்தால் துர்திஷ்டமாம்... எந்தெந்த திகதிகள் தெரியுமா? | Unlucky Dates For You Based On Your Birth Month

இதன் அடிப்படையில் எந்த மாதத்தில் எந்த திகதிகளில் பிறந்தால் அசுபம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜனவரி

பொதுவாகவே ஜனவரி மாதம் புதிய ஆரம்பங்களுடன் சம்பந்தப்படுகின்றது. ஆனால், நீங்கள் ஜனவரியில் பிறந்தவராக இருந்தால், 4 மற்றும் 13 ஆகிய திகதிகள் அசுபமானது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இந்த திகதிகளில் பிறந்தால் துர்திஷ்டமாம்... எந்தெந்த திகதிகள் தெரியுமா? | Unlucky Dates For You Based On Your Birth Month

பெப்ரவரி

பெப்ரவரி அன்பிற்குரிய மாதமாக திகழ்கின்றது. இருப்பினும் இந்த மாதத்தில் லீப் ஆண்டுகளில் மட்டுமே நிகழும் பிப்ரவரி 29, அரிதாக இருப்பதால் இந்த நாள் அசுபமாக கருதப்படுகின்றது.

மார்ச்

மார்ச் மாதம் வசந்தமானதாக கருதப்படுகின்றது.மார்ச்மாதத்தில் 15 ஆம் திகதி அசுபமாக கருதப்படுகின்றது. ஏப்ரல் ஏப்ரல் 1 ஆம் திகதி முட்டாள்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பிறந்தவர்கள் சிலருக்கு அசுபமான நாளாக கருதப்படுகின்றது.

இந்த திகதிகளில் பிறந்தால் துர்திஷ்டமாம்... எந்தெந்த திகதிகள் தெரியுமா? | Unlucky Dates For You Based On Your Birth Month

மே

மே மாதத்தில் 5 மற்றும் 20 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எண் 5 பெரும்பாலும் மாற்றம் மற்றும் கணிக்க முடியாத தன்மை காணப்படும். 20 ஆம் திகதி பிறந்தவர்கள் விபத்துகளுக்கு ஆளாகக்கூடிய நாள் என்று கூறப்படுகிறது.இதனால் இது சற்று அசுபமான நாளாக கருதப்படுகின்றது.

ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஜூன் 6 ஒரு விரும்பத்தகாத சூழ்நிலையை ஏற்படுத்தலாம். பொதுவாகவே 6 ஆம் எண்மீ காணப்படும் மூட நம்பிக்கைகளும் இதில் தாக்கம் செலுத்தலாம்.

ஜூலை

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுள் 7 மற்றும் 27 ஆம் திகதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.7ஆம் இலக்கம் பெரும்பாலும் அதிர்ஷ்டமாக கருதப்பட்டாலும், எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம்.

இந்த திகதிகளில் பிறந்தால் துர்திஷ்டமாம்... எந்தெந்த திகதிகள் தெரியுமா? | Unlucky Dates For You Based On Your Birth Month

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் 8 மற்றும் 24 திகதிகள் பல்வேறு நம்பிக்கைகளின் காரணமாக சிலரால்அசுபமாக கருதப்படுகின்றது. செப்டம்பர் செப்டம்பர் 9 ஆம் திகதி விபத்துகள் ஏற்படக்கூடிய திகதி என்று சிலர் நம்புகிறார்கள்.இதனால் இது அசுபமான நாளாக கருதப்படுகின்றது.

அக்டோபர்

இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு 13ம் திகதி என்பது கவனிக்க வேண்டிய திகதி. இது பெரும்பாலும் துரதிர்ஷ்டவசமான நாள் என்று கூறப்படுகிறது. நவம்பர் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் என்றால், 5 ஆம் திகதி சில சிக்கல்களை எழுப்பலாம். இது சதித்திட்டங்கள் மற்றும் ஆபத்துகளுடன் தொடர்புடைய திகதியாக கருதப்படுகின்றது.

இந்த திகதிகளில் பிறந்தால் துர்திஷ்டமாம்... எந்தெந்த திகதிகள் தெரியுமா? | Unlucky Dates For You Based On Your Birth Month

டிசம்பர்

கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ஆம் திகதி கொண்டாடப்பட்டாலும், இந்த நாளில் மன அழுத்தம் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளும் ஏற்படலாம். இந்த திகதியில் பிறந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.