நவகிரகங்களில் செல்வத்தை அளிப்பவராக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாவார்.

இந்த சுக்கிரன் நேற்றைய தினம் (18.01.2024) ஆம் திகதி விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்குள் நுழைந்ததன் காரணமாக பல்வேறு அதிர்ஷடங்கள் இடம்பெறவுள்ளன.

ஏற்கனவே இந்த தனுசு இராசியில் நவகிரகங்களின் தளபதியான செவ்வாயும், நவகிரகங்களின் இளவரசனான புதனும் பயணித்து வருகிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி யோகம் | Rasipalan In 2024

இதனால் தனுசு ராசியில் சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் ஒன்றாக பயணிக்கின்றன.

இதன் விளைவாக திரிகிரக யோகம், லட்சுமி நாராயண யோகம் மற்றும் மகாலட்சுமி யோகம் போன்ற மங்களகரமான யோகங்கள் உருவாகியுள்ளன.

மூன்று சுப யோகங்கள் உருவாகியிருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும் மற்றும் நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்.

மேஷம்

மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ளதால், நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பத்து ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி யோகம் | Rasipalan In 2024

 

இருப்பினும், இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ள வேண்டியிருக்கும்.

எதிர்பாராத பண வரவு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள், இந்த யோக காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

பத்து ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி யோகம் | Rasipalan In 2024

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.

திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வரன் கிடைக்கும். 

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது.

இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி யோகம் | Rasipalan In 2024

நீண்ட காலமாக வேலையைத் தேடிக் கொண்டிருந்தால், இந்த யோக காலத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

வருமானத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு வழிகளும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். சிலர் புதிய உறவுகளைப் பெறலாம்.