பொதுவாகவே தொன்று தொட்டு நாம்மில் பலராலும் சரியான காரணம் தெரியாமலேயே பின்பற்றப்படும் நடைமுறைகளில் இரவில் நகம் வெட்டக் கூடாது என்பதும் ஒன்று.

நகங்களை வெட்டுவது சுகாதாரமான செயற்பாடு. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. நகங்களில் அழுக்கு இருந்தால் நாம் உண்ணும் உணவில் கலந்து நோய்களை உண்டாக்குகின்றன.

இரவில் ஏன் நகம் வெட்ட கூடாதுன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இதுதான் | Is Not Cutting Nails At Night Scientific Reasonஎனவே நகங்களை வெட்டி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இருப்பினும், நமது முன்னோர்கள் இரவில் நகம் வெட்டக்கூடாது என்று கூறிவைத்திருக்கின்றார்கள். இரவில் நகம் வெட்டக்கூடாது என்று சொல்வது வெறும் மூட நம்பிக்கையா? அல்லது அதன் பின்னணியில் அறிவியல் காரணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இரவில் ஏன் நகம் வெட்ட கூடாதுன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இதுதான் | Is Not Cutting Nails At Night Scientific Reasonமுற்காலத்தில் மின்சார வசதி கிடையாது எனவே இப்போது இருப்பது போல் இரவில் வெளிச்சம் இருக்காது. எனவே இரவில் நகங்களை வெட்டுவதால், கீழே விழும் நகங்கள் அங்கும் இங்கும் விழுந்து அவற்றை சேகரித்து அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

ஒருவேளை இருட்டில் சரியாக நகங்களை அப்புறப்படுத்தவில்லை எனில், அவை தெரியாமல் உணவுகள் மற்றும் உண்ணக்கூடிய பொருட்களுடன் கலக்கும்போது சில ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம்.

இரவில் ஏன் நகம் வெட்ட கூடாதுன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இதுதான் | Is Not Cutting Nails At Night Scientific Reasonஅந்த காலத்தில் நக வெட்டிக்கள் இல்லை. மக்கள் தங்கள் நகங்களை வெட்டுவதற்கு கத்திகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இரவில் நகங்களை வெட்டுவதற்கு கத்திகளை பயன்படுத்தினால், காயங்கள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் இருந்தது.

இரவு நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பது கடினமாக இருக்கும் என்பதால், மக்கள் இரவில் நகங்களை வெட்டுவதை தவிர்த்து வந்தனர்.

இரவில் ஏன் நகம் வெட்ட கூடாதுன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இதுதான் | Is Not Cutting Nails At Night Scientific Reasonஇதற்கு பின்னால் பல்வேறு மத காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையில் இரவில் நகம் வெட்டக் கூடாது என சொல்லப்பட்டமைக்கு அறிவியல் காரணம் இதுதான்.