ஒவ்வொரு இரவும் தூக்கத்தின் போது ஒவ்வொரு நபருக்கும் கனவுகள் வருவது இயல்பான ஒன்று. அந்த வகையில் வரும் கனவுகள் 15 முதல் 40 நிமிடங்கள் வரை நீடிக்கும் என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். பொதுவாக கனவுகளில் வரும் காட்சிகளுக்கு அறிவியல் ரீதியிலான காரணங்கள் காணப்படுகின்றது.

அந்த வகையில் நாய் உங்களை துரத்துவது போல் கனவு கண்டால் அதன் பின்னால் என்ன உளவியல் காரணங்கள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நாய் துரத்துவது போல் கனவு வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம் | What Does It Mean If You Dream Of Chasing A Dogஒரு நாயால் துரத்தப்படுவதை போல் கனவு வந்தால் உங்கள் எல்லா உறவுகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கும் அறிகுறியாகும், ஏனெனில் நெருங்கிய ஒருவர் உங்களை ஒரு மோசமான சூழ்நிலைக்கு கொண்டுசெல்ல கூடும்.அவர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை குறிக்கும்.

நாய் துரத்துவது போல் கனவு வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம் | What Does It Mean If You Dream Of Chasing A Dog

உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்குப் பிடிக்காத ஒன்றை நீங்கள் செய்திருக்கலாம் என்பதையும், உங்கள் செயல்களால் அவர்கள் ஆத்திரம் அல்லது கோபத்தில் இருக்கிறார்கள் என்பதையும் இது உணர்த்துகின்றது. உங்கள் கனவில் ஒரு குறிப்பிட்ட வண்ண நாயைப் பார்ப்பது வெவ்வேறு தாக்கங்களைக் கொண்டிருக்கலாம்.

நாய் துரத்துவது போல் கனவு வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம் | What Does It Mean If You Dream Of Chasing A Dogஒரு பழுப்பு நிற நாய் கனவில் வருவது உங்களுக்கு எதிர்மறையான மற்றும் கடினமான நேரங்கள் வரக்கூடும் என்பதை உணர்த்துகின்றது. இப்படி கனவு வந்தால் வாழ்க்கையில் எந்த முடிவை எடுக்கும்போதும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

நாய் துரத்துவது போல் கனவு வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம் | What Does It Mean If You Dream Of Chasing A Dog

கனவில்  வெள்ளை நாய்  வந்தால் அது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகின்றது.  உங்கள் நண்பர் உங்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. மேலும் உங்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நண்பர்கள் இருக்கின்றனர் என்பதை இது உணர்த்துகின்றது. 

நாய் துரத்துவது போல் கனவு வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம் | What Does It Mean If You Dream Of Chasing A Dog

கருப்பு நாய் கனவில் வந்தால்  பொதுவாக உங்கள் வாழ்க்கையின் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து வாழ்க்கையின் எதிர்மறையை குறிக்கிறது. இது பல்வேறு விஷயங்களைக் குறிக்கலாம். இது உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் எதிர்மறையான பக்கம் குறித்து உணர்த்துவதாக இருக்கின்றது.

நாய் துரத்துவது போல் கனவு வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம் | What Does It Mean If You Dream Of Chasing A Dog

உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களுக்கு விசுவாசமற்றவராக இருக்கலாம், அத்தகைய நபர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், இது உங்கள் நண்பரின் செயல்களால் நீங்கள் எதிர்கொள்ளும் கவலையை அடையாளப்படுத்தலாம், இது எதிர்காலத்தில் அவர்கள் உங்களுக்கு பெரிய துன்பத்தை கொடுக்க போவதை முன்கூட்டியே உணர்த்துகின்றது.