பொதுவாக ருத்ராட்சம் என பார்க்கும் பொழுது அதற்கான தனித்துவம் வாய்ந்த சிறப்புக்கள் பல உண்டு.
இதனால் அணிந்திருப்பவர்களை சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இருக்கும்.
எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. மேலும் ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.
அந்த வகையில் ருத்ராட்சம் அணிவதால் என்ன நன்மைகள் என தெரிந்து கொள்வோம்.
1. ருத்ராட்சம் அணிவதால் ஒரு வகையான அமைதி காணப்படும். கவசம் போல் எம்மை எதிர்மறையான சக்திகளிடமிருந்து காத்துக் கொள்ளும்.
2. ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் அணிவதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இதனை ஆண், பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம்.
3. ஆறுமுகம்கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பை பெற்றுக் கொள்ளலாம்.
4. “ ருத்திரன்” எனப்படுவது, சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. இதனால் இதிலிருந்து கிடைக்கும் சக்திகள் ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும்.
5. சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். அனைத்தையும் கட்டுபாட்டில் வைக்கும் ஆற்றல் இதற்கு இருக்கும்.