பொதுவாகவே காய்கறிகளுள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது தான் முருங்கைக் காய்.

இதை சாப்பிடுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் இதன் சுவைக்கு பலரும் அடிமை தான், சுவையில் மட்டுமல்லாமல் முருங்கைக்காய் ஊட்டச்த்து விடயத்திலும் கொஞ்சமும் சளைத்தது அல்ல.

முருங்கைக்காயில் ஆரஞ்சி பழத்தில் உள்ளதை போன்று 7 மடங்கு வைட்டமின் -சி நிறைந்து காணப்படுகின்றது.

பாலில் காணப்படும் கால்சியத்தை விடவும் முருங்கைக் காயில் 4 மடங்கு அதிகமாக கணப்படுகின்றது.

முருங்கைக்காயின் மகிமை! எதுக்கெல்லாம் நல்லது தெரியுமா? | Murungai Kai Benefits In Tamilஅத்துடன் வைட்டமின்-ஏ பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. கீரையில் காணப்படும் இரும்புச்சத்தை ஒப்பிடும் போது இதைவிட 75 சதவீதம் அதிமாக முருங்கைக் காயில் காணப்படுகின்றது.

முருங்கைக்காயை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்ளும் போது மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வை கொடுக்கின்றது.

அதில் அடங்கியுள்ள அதிகப்படியான வைட்டமின் -சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

ஆஸ்துமா மற்றும் கல்லீரல் மற்றும் கணையம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.

மேலும் காய்ச்சல் மற்றும் சளியை போக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

முருங்கைக்காயின் மகிமை! எதுக்கெல்லாம் நல்லது தெரியுமா? | Murungai Kai Benefits In Tamil

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக் காய் உதவுகின்றது. தாய்ப்பால் சுரப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முருங்கைக் காயில் இதிகளவில் இரும்புச் சத்து காணப்படுவதால் எலும்பை வலுப்படுத்துவதுடன் இரத்தத்தை அதிகம் உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

முருங்கைக்காயின் மகிமை! எதுக்கெல்லாம் நல்லது தெரியுமா? | Murungai Kai Benefits In Tamil

மேலும் முருங்கைக்காய் ஆண்மை குறைபாடு தொடர்பான பிரச்சிகைகளை சரிசெய்து ஆண்மையை அதிகரிக்க செய்யும்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு முருங்கைக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.