வாழ்க்கைக்குத் தேவையான செல்வ வளத்தை வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.

முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும்.

செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் செல்வ வளம் பெருகும்! | If Worshiped Every Tuesday Wealth Will Increase

செவ்வாய்க்கிழமை தோறும் தங்குதடை இல்லாத வாழ்க்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்பு களையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும் கிடைக்க வேண்டும் என வேண்டி செற்றிற ஆடை அணிந்து செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.

கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமையில் இவ்வழிப்பாட்டு முறையை கடைப்பிடிப்பது மேலும் சிறப்புத் தரும்.

வேல் வழிபாடு

செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் செல்வ வளம் பெருகும்! | If Worshiped Every Tuesday Wealth Will Increase

வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுக வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும்.

இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் மற்றும் விநாயகர் படம் வைத்து வழிபட வேண்டும்.

செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் செல்வ வளம் பெருகும்! | If Worshiped Every Tuesday Wealth Will Increase

அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம். செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் செல்வ வளம் பெருகும்! | If Worshiped Every Tuesday Wealth Will Increase