பொதுவாகவே ஒரு நாளை சிறந்த நாளாக மாற்ற காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு மிக மிக முக்கியமானது. அப்படி காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

அப்படி ஆரோக்கியத்தைக் கொடுக்கும் உணவுகளை ஆரோக்கியமாகவும் அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் சில உணவுகளை காலையில் சாப்பிடவேக் கூடாது மீறி சாப்பிட்டால் உடலில் சில பிரச்சினைகள் ஏற்படும்.

அந்தவகையில் உங்கள் காலை உணவு எப்படி இருக்க வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

காலை உணவை எப்படி சாப்பிட வேண்டும்காலை உணவிற்கு செல்லும் முன் முதலில் ஒரு வட்டமான தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த தட்டில் இரண்டாக பிரித்து ஒரு பக்கம் மா பொருள் சம்பந்தமான உணவுகளையும் மற்றொரு பக்கம் புரதச்சத்து சம்பந்தமான உணவுகளையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

புரதச்சத்து இருக்கும் பக்கத்தில் முழுக்க முழுக்க காய்கறி மற்றும் பழங்களுக்கு என ஒதுக்க வேண்டும். அதிலும் உணவை எடுத்துக் கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் தான் பழங்களை சாப்பிட வேண்டும்.

ஒரு பழத்தை முழுவதுமாவோ அல்லது ஒன்றரை பழமாகவோ சாப்பிடலாம்.சக்கரை நோயிருப்பவர்கள் பழங்களை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் முட்டையை சாப்பிடலாம் அவித்து சாப்பிட்டால் ஆரோக்கியம் அதிகமாக இருக்கும்.

முட்டை உண்ணாதவர்கள் சுண்டல், பச்சை பட்டாணி, அவித்த வேர்கடலை, பயிறு என்பவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும், பச்சை கேரட், வெள்ளரிக்காய், பச்சை வெங்காயம் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்படியான உணவுகளை காலை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் முழுவதுமாக கிடைக்கும்.