சாட்டிங் போது நேரடியாக குழுக்களில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வாட்ஸ் அப் குழுக்கள் புதிய அம்சத்தினை வெளியிட்டுள்ளது.

மெட்டா நிறுவத்தினத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகின்றது. அதாவது Android மற்றும் iOS இல் உள்ள குழு அரட்டையில் பங்கேற்பாளர்களை புதிய குழுக்களில் சேர்க்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை வெளியிடுவதாக கூறப்படுகிறது.

WABetaInfo இன் படி, குழு அரட்டைகளுக்குள் ஒரு புதிய பேனர் தோன்றக்கூடும். குழுவில் புதிய உறுப்பினரை சேர்க்க, குழுத் தகவலை திரை வழியாக திறக்காமல் அவர்களை குழுவிற்குள் சேர்த்து விடலாம்.

குழு அரட்டையில் நேரடியாகப் பங்கேற்பாளர்களைச் சேர்க்கும் அம்சம், ஆண்ட்ராய்டு மற்றும் iOSக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவை நிறுவும் சில பயனர்களுக்குக் கிடைக்கிறது.

வாட்ஸ் அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்... மகிழ்ச்சியில் பயனர்கள் | Whatsapp New Change Directly Chat Screen

வரும் நாட்களில் இன்னும் அதிகமானவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் வாட்ஸ் அப் அரட்டைகளில் வீடியோ செய்தியை உடனடியாக பதிவுசெய்து பகிரும் திறனை நிறுவனம் சேர்ப்பதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

60 வினாடிகளில் நீங்கள் எதைச் சொல்ல விரும்புகிறீர்களோ அதைக் காட்டுவதற்கு வீடியோ செய்திகள் நிகழ்நேர வழி என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதாவது வாய்ஸ் அனுப்புவது போன்று காணொளி அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்... மகிழ்ச்சியில் பயனர்கள் | Whatsapp New Change Directly Chat Screen