பசும் போலவே ஆடு பாலிலும் அதிக நன்மைகள் இருக்கிறதாம். பொதுவாகவே இயற்கையாக கிடைக்கும் எல்லாப் பொருட்களும் உடலுக்கு வலிமைக் கொடுப்பது தான்.
அதுபோல ஆடு பாலிலும் பல நன்மைகள் இருக்கிறது. அதிலும் பசும் பாலை விட ஆட்டுப்பாலில் அதிக சத்துக்கள் இருக்கிறதாம். அவை என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
- ஆட்டுப்பாலை தினமும் குடிப்பதால் ஆஸ்டாபோரிஸின் ஏற்படுவது குறையும். ஆட்டுப்பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
- இதில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி, இரும்புச்சத்து என்பன இருக்கிறது. இது நம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
- ஆட்டுப்பாலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் செலேனியம் அதிகமாக உள்ளது. இது நம் உடலில் நோய்களை தாக்காமல் வலிமையான ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
- ஆட்டுப்பாலில் இருக்கும் நல்ல கொழுப்புகள் உடலில் உள்ள கொழுப்பின் அழவை சீராக்குகிறது.
- ஆட்டுப்பாலில் இருக்கும் பொட்டாசியம்,ரத்த அழுத்தத்தை சீராக்கும் மேலும் இரத்த நாளங்களை தளர்வடைய செய்து கார்டியோவாஸ்குலர் அமைப்பை சீராக்கும்.
- ஆட்டுப்பால் குடித்து வந்தால் எளிதில் செரிமானம் அடையும்.
- ஆட்டுப்பாலில் உள்ள லிபிட்ஸ் பதட்டத்தை குறைக்கும்மூளை வளர்ச்சிக்கும் மேம்பாட்டிறகும் மிக முக்கியமான அமிலமான லினோலிக் அமிலம் ஆட்டுப்பாலில் அதிகம் உள்ளது.
- இரும்பு சத்துக் குறைப்பாட்டால் ஏற்படும் அமினியா எனும் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
- இந்த ஆட்டுப்பால் ஆட்டுப்பாலில் இருக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆட்டுப்பாலில் முகம் கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.
- ஆட்டுப்பாலை தினமும் குடித்து வந்தால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்