ஆணோ பெண்ணோ இருவரின் வாழ்க்கையிலும் பல பகுதிகள் இருந்தாலும் ஆணையும் பெண்ணையும் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு உறவுப் பாலம் தான் இந்த கணவன்-மனைவி உறவு.
கணவன்-மனைவி பந்தம் பொருத்தமானதாகவும், புனிதமானதும் இதயத்திற்கு மிக நெருக்கமானதாகவும் இருக்கும். தினம் ஒரு புரிதலுடன், சண்டைப் போட்டு கெஞ்சலும் கொஞ்சலும் குறைவில்லாமல் இறுதி வரை தொடரும் பயணம் தான் இது.
கணவனிடம் எதையும் மறக்காத மனைவிக்கும் மனைவியை யாரிடமும் விட்டு கொடுக்காத கணவன் மனைவி உறவில் ஆயுள் வரை பிரிவிற்கு இடமேயில்லை. இறுதி வரை நமக்காக யோசிக்க ஒரு வாழ்க்கை துணை இருக்கிறது என்பதை உணரும் போது தான் நம் வாழ்க்கை இன்னும் அழகான வாழ்க்கையாக தொடங்கும்.
வாழ்க்கையில் எத்தனை சொந்தங்கள் வந்தாலும் கணவனுக்கு மனைவி போலவும் மனைவிக்கு கணவன் போலவும் ஒரு உண்மையான உறவு கிடைப்பது ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும்.
மனிதாராக பிறந்த எல்லோருக்குமே காதல் என்பது கண்டிப்பாக இருக்கும். ஆண் பெண் இருபாலாரும் காதலிக்காமல் இருந்திருக்க முடியாது அப்படி எல்லோரது வாழ்விலும் காதல் என்ற ஒன்று ஒரு திருப்பு முனையை சந்தித்து தான் வந்திருப்பீர்கள். அப்படி நீங்கள் காதலித்து கரம் பிடித்த துணையிடம் எப்போதும் அன்பு, காதல், அரவணைப்பு என உங்கள் அத்தனை சொந்தம் தரும் அன்பையும் மாறி மாறி பரிமாறிக் கொள்வதே இந்த உறவை இறுதி வரை கொண்டு செல்லும்.
மனைவிக்காக சில வரிகள்
- என் சந்தோசத்தை விட உன் சந்தோசம் தான் முக்கியம்
- நம் அன்பை புரிந்துக் கொண்ட இதயம் நம்முடைய கஷ்டங்களை சொல்லாமலே புரிந்துக் கொள்ளும்
- வாழ்க்கையில் வெற்றியோ தோல்வியோ கடைசி வரைக்கும் நான் உன் கூடவே இருப்பேன்
- நம் அன்பை முழுமையாக புரிந்து கொண்ட ஒரு உறவால் எப்போதும் நம்மை விட்டு பிரிந்து செல்ல முடியாது
- மனைவிக்கு தன் கணவனும் கணவனுக்கு தன் மனைவியும் தான் முதல் குழந்தை
- என் காதலை வார்த்தைகளால் தான் சொல்ல வேண்டும் என்பதில்லை
- மனைவியிடத்தில் குறைகள் கண்டுபிடிக்காத கணவன் கிடைப்பது ஒரு வரம் தான்
- உன்னை தவிர வேறு எவராலும் என்னை இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக பார்த்து கொள்ள முடியாது
- மனைவி தன் கணவனிடம் எதிர்பார்ப்பது கணவன் தன்னோடு செலவிடும் கொஞ்ச நேரத்தை மட்டும் தான்
- குழந்தை பிறந்த பின்னரும் துளி அளவு கூட குறையாத பாசத்தை தன் கணவனிடமிருந்து மனைவி விரும்புகிறாள்
கணவனுக்காக சில வரிகள்
- முத்தம் தான் நீ கொடுக்கும் தண்டனை என்றால் எப்போதும் தவறு செய்து தண்டனை பெற விரும்புகிறேன் நான்
- உன்னால் என் காதலை உணர்ந்தேன். அந்த காதலால், உன் உள்ளத்தை நான் அறிந்தேன்.
- மனைவியின் சந்தோஷம் எதுவென்றால் தன் கணவனின் சந்தோஷத்தை பார்த்து ரசிப்பதே
- மனைவிக்கு எப்போதும் இருக்கும் கோபம் தன் கணவனை பற்றியதாக மட்டும் தான் இருக்கும்
- கணவன் சிறியதாய் ஏதாவது ஒரு Gift வாங்கி கொடுத்தாலும் பெரிய சந்தோஷம் தான் மனைவிக்கு
- எனக்கு ஒரு கஷ்டம் வந்தா உன்னால எப்படி தாங்கி கொள்ள முடியாதோ அது போல தான் உனக்கு ஒரு கஷ்டம் வந்தா என்னாலும் முடியாது
- ஓங்கப்பட்ட கை இறக்கப்பட்டால், அந்த உறவின் மீது உள்ள அன்பு கோடிக்கணக்கானது
- சண்டையை தொடங்குவது நீ, சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வது நான்
- கோபத்திலும் எட்டி நிற்காமல், கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவள், ஓர் விந்தை
- கோபமாய் நான் ஓரம் நிற்கும் போது, உன் செல்ல கொஞ்சல் போதும் பெண்ணே, என் கோபமும் வெட்கமாகி போகிறது உன்முன்னே!