கேரளாவில் டவ்தே புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் புகுந்து பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பல வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. அவற்றில் சில வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
இந்நிலையில், கேரளாவில் டவ்தே புயலால் கடலோர மாவட்டங்களில் இன்றும் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது,. இதனால் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு, அம்பலபுழா,மராரிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்,. மேலும் அறுந்து விழுந்த மின் இணைப்புக்களை சரி செய்யும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்