தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்றுதான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து சமூக வலைதளங்களை பரபரப்புக்கு உள்ளாகி வருகிறது மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் ஆகிய பாடல்களுக்கு பல பிரபலங்கள் நடனமாடிய அதுகுறித்த வீடியோக்களை தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மேலும் இரண்டு நடிகைகள் மாஸ்டர் பட பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர்.
ராகவா லாரன்சின் ‘காஞ்சனா’, சாந்தனுவின் ‘சக்கரகட்டி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை வேதிகா தளபதியின் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு மிகவும் க்யூட்டாக தளபதி விஜய் போலவே நடித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதேபோல் அஜித் நடித்த வில்லன், விக்ரம் நடித்த ஜெமினி, கமலஹாசன் நடித்த அன்பே சிவம் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை கிரண் ரத்தோட், ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அவரது ஸ்டைலில் ஹாட்டாக நடனமாடி அதுகுறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களுக்கு இரண்டு நடிகைகள் நடனமாடிய இந்த இரண்டு வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது
#KuttyStory #AlwaysBeHappy 🥰 @actorvijay #TikTok pic.twitter.com/LK1XJ6BG99
— Vedhika (@Vedhika4u) May 24, 2020
Did I do it right 🙄🙄.. this one for you #thalapathyvijay#tamil#tamilsong#
A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on May 23, 2020 at 9:58am PDT