பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவையில் கலக்கிய நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் சினிமா மற்றும் சீரியல் என அனைத்திலும் தனது நெல்லை தமிழில் பேசி அசத்தியதோடு, 1980ம் ஆண்டுகளில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் ஆவார்.

இவர் நடிகர் வடிவேலுவுடன் நடித்த கிணற்றைக் காணோம் என்ற கொமடி மிகப்பெரிய ஹிட் மட்டுமின்றி, இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

பிரபல ரிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நெல்லை சிவா இன்று மாலை 6.30 மணிக்கு மாரடைப்பினால் மணமடைந்துள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பேரதிர்ச்சியினை ஏற்படுத்திய நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது இறுதிச் சடங்கு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப நாட்களாக திரையுலகினர் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ஒட்டுமொத்த மனிதர்களுக்கு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.