கேரள திரையுலகில் முன்னணி இயக்குனர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தாவாக இருந்தவர் டென்னிஸ் ஜோசப். இவர் கோட்டயத்தில் உள்ள ஏற்றமானூர் பகுதியில் வசித்து வந்தார். வீட்டில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

டென்னிஸ் ஜோசப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டென்னிஸ் ஜோசப், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

டென்னிஸ் ஜோசப், மலையாள சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்டவர். கதை வசனத்தோடு, பல படங்களையும் இயக்கியுள்ளார். அப்பு, மனுஅங்கிள், அக்ராஜன், தொடர்கதா, அதர்வம் உள்ளிட்ட மலையாள மொழி திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ளது.

டென்னிஸ் ஜோசப் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான மனு அங்கிள் படம் 1989-ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. அதே ஆண்டு சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான கேரள மாநில அரசு விருதும் அப்படத்திற்கு கிடைத்தது. மரணம் அடைந்த டென்னிஸ் ஜோசப் உடலுக்கு மலையாள திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

 தேசிய விருது பெற்ற  இயக்குனர் மரணம்