தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ் மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் (06) 187 நடமாடும் விற்பனையாளர்கள் சோதனை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும், 852 நிறுவனங்கள் சோதனை இடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பகல் நேர பராமரிப்பு நிலையங்கள், மேலதிக வகுப்புகள், உட்புற விளையாட்டு மைதானங்கள் மற்றும் உணவகங்கள் இதன் கீழ் சோதனை இடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கைகள் இன்றைய தினமும் செயற்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 436 பேர் நேற்றைய தினம் (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 101 பேர் புறக்கோட்டை மற்றும் டாம் வீதி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் அதிகப்படியானவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.