தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் பாலிவுட் சினிமாவிலும் தற்போது தடம் பதித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருந்து வரும் கீர்த்தி சுரேஷ் இறுதியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் பிறந்த நாளுக்கு வாத்தி கம்மிங் பாடலை வயலின் வாசித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து தற்போது தன்னுடைய நாய் குட்டியுடன் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த நாய்க்குட்டி தான் தன்னுடைய மகன் என குறிப்பிட்டுள்ளார்.
நாய்க்குட்டி கீர்த்தி சுரேஷை பார்த்து மம்மி ஷூட்டிங் போதும் ரைடு போலாம் வா என அழைப்பது போல புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்