கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

எஹலியகொட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 19 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.மற்றயவர் எஹலியகொடமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சடலம் எஹலியகொட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது . எஹலியகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.