அமெரிக்காவில் இலங்கையர் மீது கறுப்பினத்தவர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்திக் குறிப்பில், நியூயார்க் சுரங்க ரயிலில், கடந்த வெள்ளிக்கிழமை, செக்யூரிட்டியாக பணியாற்றும் இலங்கையரான Narayange Bodhi (68) என்பவர் வேலைக்கு

சென்றுகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, திடீரென வந்த கருப்பினத்தவரான Marc Mathieu (36) என்பவர், கெட்ட வார்த்தையால் திட்டியபடி Bodhiயின் முகத்தில் ஓங்கிக் குத்தியிருக்கிறார்.

முகத்தில் இரத்தம் சொட்டச்சொட்ட Bodhi அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தற்போது Marc கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றம், அவரது செயலை இனவெறித்தாக்குதல் தான் என முடிவு செய்துள்ளது - என குறிப்பிடப்பட்டுள்ளது.