லண்டனில் இரவில் அடுக்குமாடி கட்டிடத்தின் உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்த 12 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனின் ஹகர்ஸ்டனில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி இரவு 9 மணியளவில் 12 வயது சிறுமி அடுக்குமாடி வீட்டின் உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு பொலிசாரும், அவசர உதவி குழுவினரும் வந்த நிலையில் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது.

பின்னர் சிறுமி மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டாள்.

தற்போது அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்துள்ள நிலையில் இந்த சம்பவத்தில் சந்தேகத்துக்குரிய விடயங்கள் எதுவும் இல்லை என பொலிசார் கூறியுள்ளனர்.