கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய தினம் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கா.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியதை காண முடிந்தது.
உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி எனப்படும் சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாசும் இன்று கா.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடத்தில் தற்போது வசித்து வரும் சுனாமி பேபி அபிலாஸ் இன்று செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு மிகவும் உற்சாகத்துடன் தோற்றினார்.
இன்று (01) காலை தனது பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் ஆலய வழிபாட்டினை பூர்த்திசெய்து மிகவும் உற்சாகத்துடன் தான் பரீட்சைக்கு தோற்றுவதாக அவர் தெரிவித்தார்.
சுனாமி அனர்த்ததின் போது கண்டெடுக்கப்பட்ட அபிலாஸ் தனது குடும்பத்தினை கண்டுபிடிப்பதற்காக நடைபெற்ற பரீட்சையில் சித்தி பெற்றதை போன்று தனது வாழ்கையின் பரீட்சையிலும் இன்று களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
O/L பரீட்சை எழுதும் சுனாமி பேபி!
- Master Admin
- 01 March 2021
- (1809)

தொடர்புடைய செய்திகள்
- 15 March 2021
- (456)
நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்களின்...
- 03 June 2024
- (154)
சந்தனத்தை எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் அ...
- 06 March 2021
- (474)
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்...
யாழ் ஓசை செய்திகள்
நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி
- 19 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.