பிரித்தானியாவில் குளிரூட்டப்பட்ட லொறி கண்டெயினரில் அடிமைகளாக கடத்திக் கொண்டு செல்லப்பட்ட 18 அபிரிக்கர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் Peterborough-க்கு அருகில் A1M-ல் உள்ள Haddon service stationல் ஒரு HGV லொறி நிறுத்தப்பட்டிருந்தது.
அதன் ஓட்டுநர், லொறியின் பின்னல் இருக்கும் குளிரூட்டப்பட்ட கண்டெயினரில் மனிதர்கள் இருப்பதை அறிந்து கொண்டார். பின்னர் அவர்களை காப்பாற்றுவதற்காக உடனடியாக Cambridgeshire காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அந்த இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார், கண்டெயினரை உடைத்து அதிலிருந்த 5 பெண்கள் உட்பட 18 ஆபிரிக்கர்களை மீட்டனர்.
Eritrea நாட்டை சேர்ந்த அவர்கள் அடிமைகளாக கடத்தி கொண்டுவரப்பட்டுள்ளனர். வெகு நேரமாக குளிரூட்டப்பட்ட கண்டெயினரில் இருந்த அவர்கள் யாருக்கும் எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படவில்லை.
அவர்கள் Immigration Service-ல் ஒப்படைக்கப்பட்டு, மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகினறனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
இதேபோல் கடந்த பிப்ரவரி 17-ஆம் திகதி, Cambridgeshire-ல் Huntingdon அருகிலுள்ள Brampton Hut Service-ல் ஒரு லொறியின் பின்புறத்திலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய பொலிஸார், "இது போன்ற கதைகள் துன்பகரமானதாக இருக்கலாம், ஆனால் அடிமைத்தனமும், மனிதர்கள் கடத்தபடுவதும் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. இதனை தடுக்க பொலிஸுக்கு இதுபோல பொதுமக்களின் உதவி தேவைப்படுகிறது" என்றார்.
இது போன்று கண்டெயினர்களிலிருந்து ஏதேனும் சத்தம் எழுந்தாலோ, கவனத்திற்காக உள்ளிருந்து யாரேனும் குப்பைகளை ரோட்டில் எறிந்தாலோ, வேறு ஏதேனும் சந்தேகப்படும்படி நடந்தாலோ பொதுமக்கள் தயங்காமல் பொலிஸுக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.