கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பிரபலமானவர் சில்வா. அஜித்தின் வீரம், விஸ்வாசம், விவேகம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் ரசிகர்களை கவரும் வகையில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளை அமைத்தது இவர்தான். அதேபோல் விஜய்யுடனும் ஜில்லா, பைரவா, மாஸ்டர் என ஏராளமான படங்களில் பணியாற்றி உள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் சில படங்களில் நடிகராகவும் அசத்தி உள்ளார் சில்வா. இந்நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளாராம். சில்வா இயக்க உள்ள படத்துக்கு பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் தான் கதை மற்றும் திரைக்கதை அமைக்க உள்ளாராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.