தற்போது டிவி நிகழ்ச்சி ரசிகர்கள் பலரின் ஃபேவரைட் காமெடியனாக இடம் பிடித்தவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அவர் தற்போது பிரபலமாக மாறிவிட்டார். பெண் வேடத்தில் தாம் நாம் அவரை பார்த்திருப்போம்..
கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மூன்று வேளை சாப்பாடு கூட இல்லாமல் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டாராம்.
மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்து வந்த அவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் டிவி ஷோக்களில் நடித்து வந்த சமயத்தில் அவரை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 600 பேர் மட்டுமே பின்பற்றி வந்தனர்.
குக்கு வித் கோமாளி சீசன் 2 ல் தற்போது அவரை 1 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்களாம். சினிமா பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்துள்ளன.