ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள வேம்பள்ளி அடுத்த பாலக்கொண்ட வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் சென்றனர்.

செம்மர கட்டைகளை வெட்டி தோளில் சுமந்து கொண்டு வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு காட்டு யானை ஒன்று திடீரென வந்தது. அது செம்மரக் கும்பலை விரட்டியது. அதில் ஒருவரை யானை மிதித்து பரிதாபமாக கொன்றது.

அப்போது அங்கு வனத்துறையினரும் ரோந்து சென்றனர். செம்மரக் கட்டைகளை கடத்தி சென்ற 2 பேரை அவர்கள் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து யானை மிதித்து உயிரிழந்தவரின் பிணத்தை பெற்றுச் செல்லும்படி அவரது உறவினர்களுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் செம்மரம் வெட்ட வந்த இடத்தில் யானை மிதித்து உயிரிழந்ததால், வனத்துறையினர் தங்கள் மீது வழக்கு தொடர்வார்களோ? என்ற அச்சத்தில் உறவினர்கள் வர மறுக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.