நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 505 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, 916 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக 58ஆயிரத்து 75 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 114 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.