தமிழகத்தில் மேலும் 543- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 31 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பால் இன்று ஒரு நாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 772- பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 152- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.