ஆளும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் அவரது மறைந்த தந்தை மற்றும் தாத்தாவால் வகிக்கப்பட்ட இந்த பதவிக்கு தற்போது கிம் ஜோங் உன் பொறுப்பேற்றுள்ளார்.
முன்னாள் வடகொரிய தலைவரும் தொழிலாளர் கட்சியின் பொது செயலாளருமான கிம் ஜோங் இல், கடந்த 201ஆம் ஆண்டில் மரணமடைந்ததற்கு பிறகு இந்த பதவி வெற்றிடமாக இருந்தது.
இதையடுத்து அவரது மகனான கிம் ஜோங் உன் ஜனாதிபதியாக பதவியேற்ற போதிலும், பொதுச் செயலாளர் பதவிக்கு யாரும் புதிதாக தேர்வு செய்யப்படாமல் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.