சௌபாக்கிய தொலைநோக்கு´ கொள்ளை பிரகடனத்திற்கு அமைய நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் இன்று (04) ஆரம்பமாகிறது.
குறித்த வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக 3 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஒருகொடவத்தை பிரதேசத்தில் ஆரம்பப்படவுள்ளதாக மாநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மற்றும் மாநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
முதல் கட்டத்தின் கீழ் இந்த குறித்த வீட்டுத்திட்டம் கொழும்பு மாவட்டத்தின் ஒருகொடவத்தை, புளுமென்டல், மாலம்பே, மாகும்புர, பொரலெஸகமுவ ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் பெஹலியகொடை பிரதேசத்திலும் மற்றும் கண்டி மாவட்டத்தின் கெடம்பே பிரதேசத்தில் இந்த வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.