மட்டக்களப்பு நகரிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றும் ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று குறித்த பல்பொருள் அங்காடி பூட்டப்பட்டதுடன் அதில் கடமையாற்றிய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பல்பொருள் அங்காடிக்கு வருகை தந்தவர்களைளையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஆரையம்பதியில் நேற்று முன்தினம் எழுமாறாக செய்யப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் குறித்த பல்பொருள் அங்காடியில் கடமையாற்றும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டதையடுத்தே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் மயூரன் குறிப்பிட்டுள்ளார்.