யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 393 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதகா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொற்று கண்டறியப்பட்ட நால்வரில் ஒருவல் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் ஏற்கனவே தொற்று கண்டுடறியப்பட்டவருடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய 389 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.