கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறபாநகர் கிராமத்தில் மதில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை நாசீவந்தீவைச் சேர்ந்த சிறுவன் தனது தாய் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவிற்கு சென்ற நிலையில் அறபாநகர் பகுதியிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்த நிலையில் எதிர் வீட்டு மதில் சுவரினை பிடித்து ஏறுவதற்கு முயற்சித்த போது மதில் சிறுவன் மேல் விழுந்துள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை நாசீவந்தீவு முருகன் ஆலய வீதியைச் சேர்ந்த கோபால் பிறேமசாந் என்ற (வயது 13) சிறுவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
மதில் விழுந்து சிறுவன் ஒருவன் பலி
- Master Admin
- 26 December 2020
- (425)

தொடர்புடைய செய்திகள்
- 17 June 2024
- (286)
மிதுன ராசியில் உருவான திரிகிரஹி யோகத்தை...
- 16 March 2025
- (57)
2 நாட்களுக்கு முன் நடந்த சூரிய பெயர்ச்சி...
- 08 October 2024
- (107)
போலியான முந்திரிப் பருப்பை கண்டுபிடிப்பத...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய ராசிபலன் - 16.03.2025
- 16 March 2025
மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு
- 15 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
- 15 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.