சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 32).இவர் 2013-ம் ஆண்டு போலீஸ் துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சேலம் ஆயுதப்படையில் போலீஸ்காராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தனர். திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் பாலாஜிக்கு குழந்தை இல்லையாம். இதனால் பாலாஜி வேதனையில் இருந்தார். மேலும் இவருக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை பாலாஜியின் அறை வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது அங்கு பாலாஜி தூக்கில் பினமாக தொங்கிக் கொண்டிருநதார்.

உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்,

தற்கொலை செய்து கொண்ட பாலாஜி சிலரிடம் கடன் வாங்கி இருந்தாராம். இதனால் அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்தாரா? குழந்தை இல்லாத ஏக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.