லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி தற்போது ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் கிளடியேடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன.

நாணய சுழற்சியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் கோல் கிளடியேடர்ஸ் அணி தற்போது 2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 7 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.