லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ’டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே
இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நெல்சன், ‘டாக்டர்’ படம் குறித்து மனம் விட்டு பல விஷயங்களைப் பேசி உள்ளார்
‘டாக்டர்’ என்ற டைட்டிலை பார்த்ததும் இது மெடிக்கல் க்ரைம் படம் என்று பலர் நினைக்கிறார்கள் என்றும் ஆனால் உண்மையில் இது ஒரு காமெடி படம் என்றும் அதே நேரத்தில் லாஜிக் இல்லாத காமெடி படமாக இருக்காது என்றும் கூறினார். இந்த படத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது அந்த சம்பவத்தில் 6 பேர் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று நெல்சன் கூறினார்
அதேபோல் ’கோலமாவு கோகிலா’ படத்தில் ரெடின் கேரக்டர் எப்படி பார்வையாளர்களுக்கு புதிதாக இருந்ததோ அதேபோல் இந்த படத்திலும் சில கேரக்டர் வைத்திருப்பதாகவும், காமெடியன்கள் மட்டும் தான் காமெடி செய்ய வேண்டும் என்று இல்லாமல் இந்த படத்தில் உள்ள அனைவருமே காமெடி செய்யும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்
மேலும் முதல் பாதி முழுவதும் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும் என்றும் இரண்டாம் பாதி முழுக்க கோவாவில் வித்தியாசமான வகையில் இருக்கும் என்றும் இயக்குனர் நெல்சன் கூறியதை அடுத்து ‘டாக்டர்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது