கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இணையவழியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. எனவே கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம்” என கூறினார்.
மேலும், “கொரோனா தடுப்பூசி விநியோக நெரிசலில் ஏழைகளையும், ஓரங்கட்டப்பட்டவர்களையும் பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நாடுகள் மிதித்து விடக்கூடாது” என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “கொரோனா வைரஸ் பெருந்தொற்று அதன் மிகச்சிறந்த மற்றும் மிக மோசமான பக்கத்தை மனித குலத்துக்கு காட்டி உள்ளது. இரக்கம், சுய தியாகத்தின் ஊக்கம் அளிக்கும் செயல்கள், விஞ்ஞானம் மற்றும் புதுமையின் மூச்சடைக்கக்கூடிய சாதனைகள் மற்றும் ஒற்றுமையின் இதயத்தை தூண்டும் நிகழ்வுகளையும் கூட காட்டியுள்ளது” என கூறினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வௌியிட்ட அறிவிப்பு!
- Master Admin
- 06 December 2020
- (563)
![](https://newstamizha.com/storage/app/news/2f7799c77f83ccf01c3d0b0eba1dda87.jpg)
தொடர்புடைய செய்திகள்
- 07 January 2021
- (1233)
வன்முறையில் 4 பேர் பலி... டிரம்ப் மீது ஆ...
- 03 December 2020
- (319)
‘பெல்கான் ஐ-2’ செயற்கைகோள் வெற்றிகரமாக வ...
- 14 September 2023
- (308)
இரவு தூக்கத்தில் எந்த தொந்தரவும் இருக்கக...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 07 February 2025
யாழில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை
- 07 February 2025
யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை
- 06 February 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
- 06 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.