லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’.

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இந்நிலையில் படம் குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தீபாவளிக்கு டீசர் வெளியாகும் என்ற நல்ல செய்தியை சொன்ன படக்குழு தற்போது டீசரை வெளியிட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்திருக்கும் ரசிகர்கள் டீசர் வெளியாவதற்கு முன்பே #mastarteaser என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.